எல்ஐசி 25 % பங்குகள் விற்பனை – மத்திய அரசு திட்டம்

 

எல்ஐசி 25 % பங்குகள் விற்பனை – மத்திய அரசு திட்டம்

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எல்ஐசி 25 % பங்குகள் விற்பனை – மத்திய அரசு திட்டம்

இது தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை முடங்கி, பொருளதாராம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதனால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், தேக்க நிலையில் உள்ள வர்த்தக மற்றும் தொழில்துறையை, வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிக சொத்து மதிப்பு கொண்ட பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் 25 சதவீத பங்குகளை ஐபிஒ எனப்படும் பொதுபங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, நிதி பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எல்ஐசியின் 25 சதவீத பங்குளை ஐபிஒ முறையில் விற்பனை செய்வது தொடர்பான பணிகளுக்கு எஸ்பிஐ லைப் கேபிடல் லிமிடெட் மற்றும் டிலாய்ட் டச்சே, டொமாட்சு ஆகிய நிறுவனங்களை நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பங்கு விற்பனை பல கட்டங்களாக நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்றவுடன், எல்ஐசியின் 25 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்