“நூலகங்களில் போய் போன நோண்டலாம்” -செப்டம்பர் முதல் லைப்ரரிக்கு வாங்கண்ணே ..

“நூலகங்களில் போய் போன நோண்டலாம்” -செப்டம்பர் முதல் லைப்ரரிக்கு வாங்கண்ணே ..

கொரானா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகளுடன் பல அரசு நிறுவனங்கள் இயங்கிவரும் நிலையில் லைப்ரரிகள் திறக்கப்படாமல் இருந்ததால் அது எப்போது திறக்கும் என்று காத்திருந்த வாசகர்களுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான தகவலை கூறியுள்ளது

“நூலகங்களில் போய் போன நோண்டலாம்” -செப்டம்பர் முதல் லைப்ரரிக்கு வாங்கண்ணே ..

தமிழ்நாட்டில் 4636 நூலகங்கள் இருக்கின்றன .இது தவிர கன்னிமரா லைப்ரரி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் 1926 கிளை நூலகங்கள் மற்றும் 749 பொது நூலகங்கள் மற்றும் பகுதி நேர நூலகங்கள் என்று ஆயிரக்கணக்கான நூலகங்கள் மார்ச் 25 ந்தேதியிலிருந்து மூடப்பட்டிருக்கின்றன .
இதனால் பல வாசகர்கள் புத்தகம் படிக்க முடியாமலும் ,செல் போன் நோண்டுவதற்கு இடம் கிடைக்காமல் பல வாசகர்களும் திண்டாடி வந்தார்கள் .இன்னும் சில காதல் ஜோடிகளுக்கு சந்திக்க அமைதியான இடம் கிடைக்காமல் அல்லாடினார்கள்
அவர்களுக்கெல்லாம் அரசு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது .அதாவது வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பகுதி நேர நூலகம் தவிர மற்ற அனைத்து கிளை நூலகங்கள் ,பொது நூலகங்கள் செயல்படுமென்றும் ,வாசகர்கள் வழக்கம்போல் தங்களின் பணிகளை தொடரலாமென்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது .
மேலும் இந்த நூலகங்களில் இந்த வைரஸ் பரவும் நேரத்தில் எப்படி முன்னெச்சரிக்கையுடன் செய்ல் படவேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது .

“நூலகங்களில் போய் போன நோண்டலாம்” -செப்டம்பர் முதல் லைப்ரரிக்கு வாங்கண்ணே ..