விசிகவினர் கல்வீச்சு – போலீஸ் தடியடி: சேலம் -தர்மபுரி எல்லையில் பதற்றம்

 

விசிகவினர் கல்வீச்சு – போலீஸ் தடியடி: சேலம் -தர்மபுரி எல்லையில் பதற்றம்

சேலம் – தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் கே. மோரூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் திமுக-அதிமுக கொடிக்கம்பங்கள் இருப்பதால் பொதுமக்களுக்கு அவை இடையூறாக இருப்பதாக இந்த இடத்தில் இனிமேல் கொடிக்கம்பங்கள் எதுவும் நடக்க கூடாது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விசிகவினர் கல்வீச்சு – போலீஸ் தடியடி: சேலம் -தர்மபுரி எல்லையில் பதற்றம்

அந்த தீர்மானம் காவல்துறைக்கும் வருவாய்துறைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதே இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கொடிக்கம்பம் நடுவதாகவும் அதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்து கொடியேற்றுவதாகவும் த கடந்த 17ஆம் தேதி அக்கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.

வருவாய் துறையினரும், காவல் துறையினரும் இதற்கு அனுமதி மறுத்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று தடையை மீறி கே. மோரூர் பேருந்து நிலையம் பகுதியில் கொடிக்கம்பத்தை நடுவதற்காக முயற்சித்தனர்.

தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதலை சிறுத்தைகள் நடுவதாக இருந்த கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சென்றனர். இதனால் போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றனர்.

ஆனாலும் கே. மோரூர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.