இரு திரைகள் கொண்ட T வடிவிலான ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த எல்ஜி திட்டம்

இரு திரைகள் கொண்ட T வடிவிலான ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த எல்ஜி திட்டம்

எல்ஜி நிறுவனம் டி என்ற ஆங்கில எழுத்து வடிவிலான இரட்டை திரை கொண்ட வித்தியாசமான செல்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அகண்ட திரை – நீள திரை

இரு திரைகள் கொண்ட T வடிவிலான ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த எல்ஜி திட்டம்

இது தொடர்பாக யூடியூப்பில் ஒரு டீசர் காணொளியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த செல்போனில் அகலமாக ஒரு திரையும், நீள வடிவில் ஒரு திரை என மொத்தம் 2 திரைகள் உள்ளன. அதில் ஒன்றை திருப்பக்கூடிய வசதி இருப்பதையும் உணர முடிகிறது. இதன் மூலம் அகண்ட காட்சிகளை அகண்ட திரையிலும், நீள் வடிவிலான காட்சிகளை நீண்ட திரையிலும் ஒரே நேரத்தில் காண முடியும். இந்த வித்தியாசமான செல்போனை எல்ஜி வரும் 14ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த காணொளியில் தெரிவித்துள்ளது.
73 ஆயிரம் ரூபாய்

இரு திரைகள் கொண்ட T வடிவிலான ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த எல்ஜி திட்டம்

இதனிடையே இந்த புதிய ஸ்மார்ட்போன் விங் என்ற பெயரில் அறிமுகாக உள்ளதாகவும், அதன் நீள் வடிவிலான திரை, 6.8 இன்ச் கொண்டதாகவும், அகண்ட திரை 4 இன்ச் கொண்டதாகவும் இருக்கும் என்றும் இந்த போன் இந்திய மதிப்பில் 73 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.