டுயல் கேமரா, 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட எல்.ஜி ஹார்மனி 4 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம்

 

டுயல் கேமரா, 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட எல்.ஜி ஹார்மனி 4 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம்

வாஷிங்டன்: டுயல் கேமரா, 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட எல்.ஜி ஹார்மனி 4 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுயல் கேமரா, 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட எல்.ஜி ஹார்மனி 4 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் கடந்த ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எல்.ஜி கே40எஸ் ஸ்மார்ட்போனை போல உள்ளது. இந்த வடிவமைப்பில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. டைட்டன் நிறத்தில் மட்டும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

அமெரிக்காவில் 139 டாலர் (தோராயமாக ரூ.10,100) என இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்குமா என்பது பற்றி எல்.ஜி தரப்பில் இருந்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதன் சிறப்பம்சங்களாக 6.1 இன்ச் ஃபுல் விஷன் ஹெச்.டி டிஸ்பிளே, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி, 13 எம்.பி டுயல் மெயின் கேமரா, 8 எம்.பி செல்பி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆகியவை இடம்பெற்றுள்ளன.