• February
    17
    Monday

Main Area

Main



தலையைக் கொடுத்து காவிரி தாயைக் காப்போம்: உதயநிதி ட்வீட்

udhayanidhistalin
udhayanidhistalin

சென்னை: தலையைக் கொடுத்து தாயைக் காப்போம் என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் தோழமைக்கட்சிகள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மேகேதாட்டு அணையை தடுப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது. மத்திய அரசின் இந்த செயற்கையான சதியை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.  இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியையும் மன்னிக்கமாட்டார்கள். பாஜக எந்த குட்டிக்கரணம் போட்டாலும் அந்த கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், தலையைக் கொடுத்து காவிரி தாயைக் காப்போம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "காவிரி என்பது தண்ணீர் அல்ல, தாய்! தலையைக் கொடுத்து தாயைக் காப்போம்! தடுப்பணை தடுத்து காவிரியை மீட்போம்" என பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.