‘விவேக் கனவை நனவாக்குவோம்’.. கண்ணீர் மல்க மாணவர்கள் உறுதிமொழி!

 

‘விவேக் கனவை நனவாக்குவோம்’.. கண்ணீர் மல்க மாணவர்கள் உறுதிமொழி!

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது நகைச்சுவை மூலம் மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்ட விவேக், சமூக நலனிலும் மிகுந்த அக்கறைக் கொண்டவராக திகழ்ந்தார். தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து லட்சக் கணக்கான மரக்கன்றுகளை நட்டார். அவர் மறைந்தாலும் அவர் நட்ட மரங்கள் என்றும் தாங்கி நிற்குமென அவரது உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் சிந்துகிறார்கள்.

‘விவேக் கனவை நனவாக்குவோம்’.. கண்ணீர் மல்க மாணவர்கள் உறுதிமொழி!

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த மாணவர்கள் மரங்களை நடவு செய்து விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றுவோமென உறுதிமொழி ஏற்றுள்ளனர். தீபன் என்ற ஒரு மாணவன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ஒரு கோடி மரங்களை நடவு செய்ய வேண்டும் என்பதே விவேக்கின் லட்சியம். நாங்கள் 20 கன்றுகளை நட்டுள்ளோம். எங்களை போல நீங்களும் மரம் நட வேண்டும். அப்போது தான் விவேக் ஆத்மா சாந்தி அடையும் என்று உருக்கமாக பேசியிருந்தார்.

‘விவேக் கனவை நனவாக்குவோம்’.. கண்ணீர் மல்க மாணவர்கள் உறுதிமொழி!

அதன் படி, கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்களும் பெரியாலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மாணவர்களும் விவேக் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகளை நடுவோமென உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என அம்மாணவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.