’’எல்லை வீரனைப் போல் ஆயத்தப்படுத்துக்கொள்வோம்’’ – வைரமுத்து

 

’’எல்லை வீரனைப் போல் ஆயத்தப்படுத்துக்கொள்வோம்’’ – வைரமுத்து

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்திய உள்துறை அமைச்சர், தமிழக ஆளுநர், கர்நாடக முதல்வர், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் என அதிகாரத்தில் இருப்போர் முதல் சாமானியர் வரையில் எவரையும் பாகுபாடு பாற்காமல் தொற்றி வருகின்றது கொரோனா தொற்று. ஆனாலும், குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துகொண்டேதான் வருகிறது. நடிகர் அமிதாப்பச்சன், 110வயது மூதாட்டி என்று பலரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதை கருத்தில் கொண்ட கவிஞர் வைரமுத்து, ’’கொரோனா ஒவ்வொரு குடிமகனையும் ஒருமுறை தொட்டுப் போகலாம்; மீளும் வாய்ப்பே அதிகம்.
போரை எதிர்பார்க்கும் எல்லை வீரனைப் போல் நம் மனம், உடல், மருத்துவம் மூன்றையும் ஆயத்தப்படுத்திக் கொள்வது அவசியம். இந்திய உள்துறை அமைச்சர்,
தமிழ்நாட்டு ஆளுநர், கர்நாடக முதல்வர் நலமுற வாழ்த்துவோம்’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.