`கடவுள் குறித்த விழிப்புணர்வா?; பெரியாரை போன்று நடந்து கொள்வோம்!’- கருப்பர் கூட்டத்துக்கு முத்தரசன் அட்வைஸ்

 

`கடவுள் குறித்த விழிப்புணர்வா?; பெரியாரை போன்று நடந்து கொள்வோம்!’- கருப்பர் கூட்டத்துக்கு முத்தரசன் அட்வைஸ்

பெரியார் போல நாகரீகமான முறையில் மட்டும்தான் கடவுள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள இந்திய கம்னியூஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், “மத நம்பிக்கை உள்ளவர்களை புண்படுத்தும் விதமாக எந்த பிரச்சாரத்தையும் முன்னெடுக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

`கடவுள் குறித்த விழிப்புணர்வா?; பெரியாரை போன்று நடந்து கொள்வோம்!’- கருப்பர் கூட்டத்துக்கு முத்தரசன் அட்வைஸ்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யூடியூப் சேனல்களில் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கட்சிகளை அசிங்கப்படுத்துவது, தலைவர்களை அசிங்கப்படுத்துவது, மதங்களை அசிங்கப்படுத்துவது அல்லது கடவுள்களை இழிவு படுத்துவது போன்றவற்ளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டம். இல்லையென்றால் இது போன்ற செயல்கள் பல எதிர் விளைவுகளை நிச்சயமாக ஏற்படுத்தும். பெரியார் போல நாகரீகமான முறையில் மட்டும்தான் கடவுள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மத நம்பிக்கை உள்ளவர்களை புண்படுத்தும் விதமாக எந்த பிரச்சாரத்தையும் முன்னெடுக்கக் கூடாது.

`கடவுள் குறித்த விழிப்புணர்வா?; பெரியாரை போன்று நடந்து கொள்வோம்!’- கருப்பர் கூட்டத்துக்கு முத்தரசன் அட்வைஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாத்திக கட்சியாக இருந்தாலும் கூட மதநம்பிக்கை வைத்திருப்பவர்களின் மனம் புண்படும்படி ஒருபோதும் அறிக்கையோ மேடைகளிலும் நாங்கள் பேசியது கிடையாது. இனி மேலும் நாங்கள் கடவுளைப்பற்றி பேசமாட்டோம். அதேபோல் தமிழ் கடவுள் முருகன், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழலில் கருப்பர் கூட்டம் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இது போன்ற பேரிடர் காலத்தில் இது போன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாள்தோறும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றுப் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இது போன்ற பல பிரச்னைகள் இருக்கக் கூடிய நிலையில் இந்தப் பிரச்னையை கவனம் செலுத்துவதால் திசை திருப்ப கூடிய நிலை ஏற்படும். அதற்கு இடமளிக்காமல் எல்லோரும் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.