பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் – முதல்வர் ஸ்டாலின்

 

பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் – முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார். அவரின்136வது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிற்போக்குத் தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்! பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்! என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் – முதல்வர் ஸ்டாலின்

கனிமொழி எம்.பி., சாதிய கட்டமைப்பில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதை எதிர்த்துப் போராடிய, பெண்ணியவாதியும் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவருமான முத்துலட்சுமி ரெட்டி அவர்களது பிறந்த நாள் இன்று. நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ சமூகத்தை படைப்போம். என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் .