’’திராவிடக் கொடி பிடிப்போம்’’ -வலியுறுத்தும் வைரமுத்து

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று வலியுறுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசினால் வடிவமைக்கப்பட்டதுதான் தேசிய கல்விக்கொள்கை. 1968ஆம் ஆண்டில் இந்திராகாந்தி ஆட்சியின்போது முதல் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பின்னர், 1986ஆம் ஆண்டில் ராஜீவ்காந்தி ஆட்சியில் இரண்டாம் தேசிய கல்விக்கொள்கை வந்தது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நரேந்திரமோடி ஆட்சி்யில் மூன்றாவது கல்விக்கொள்கை கொண்டுவரப்படுகிறது.

மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வரும் இந்த புதிய கல்விக்கொள்கையினால் தமிழ்நாடு மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதால்தான் இக்கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

புதிய கல்விக்கொள்கையினால் இரு மொழிக் கொள்கை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இனி மும்மொழிக் கொள்கையை ஏற்றுச் செயல்படுத்தப் பட கட்டாயம் ஆக்கப்படும். மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்புக்கு இடமேற்படுத்தும் இத்திட்டத்திற்கு ஆரம்ப நிலையிலேயே அதிமுக அரசு தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை – கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்து தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த நிலைப்பாட்டினை இவ்வாட்சி கைவிடக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.

இதையடுத்து கவிஞர் வைரமுத்துவும் தனது டுவிட்டர் பதிவின் மூலமாக,
‘’அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்’’அதிமுக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Most Popular

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...