100க்கும் கீழ் குறைந்தது கொரோனா உயிரிழப்புகள்!

 

100க்கும் கீழ் குறைந்தது கொரோனா உயிரிழப்புகள்!

இந்தியாவில் கொரோனாவுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் 100க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது வரை ஓய்ந்த பாடில்லை. கொரோனா வைரஸின் வீரியம் குறைந்திருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் அச்சம் நீடிக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலேயே புதிதாக கொரோனா பாதிப்புகள் பதிவாகிறது. இதனிடையே கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், இதுவரை 66,11,561 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100க்கும் கீழ் குறைந்தது கொரோனா உயிரிழப்புகள்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,067 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,55,252 ஆக அதிகரித்துள்ளதாகவும் 13,087 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 1,41,511 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.