10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு : முழு விவரம் உள்ளே!

 

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு : முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் புதிதாக கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

பல உலக நாடுகள் இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் ஒன்றுக்கு இரண்டு தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியா, பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விநியோகம் செய்து வருகிறது. அதே வேளையில், இந்திய மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முன்னோடியாக திகழ்கிறது. தடுப்பூசி தொடர்பான பல வதந்திகள் பரவி வருவதால், பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். விரைவில், கொரோனா இல்லாத இந்தியா உருவாகும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு : முழு விவரம் உள்ளே!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,102 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,06,76,838 ஆக அதிகரித்துள்ளதாகவும் 117 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,53,587 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 1,77,266 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 1,03,45,985 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 20,23,809 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.