தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

கொரோனா பாதிப்பு மக்கள் வாழ்வாதரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பல இடங்களில் இதே சூழல் தான் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இதனிடையே மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதே போல, ஊரடங்கு காலத்திலும் 90% மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 90% மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மின்வாரியத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும், உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கொரோனா முடியும் வரை குறைந்தபட்சம் கட்டணமே வசூலிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளனர்.