வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

 

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம், நெல்லிக்காய் சாறு என்று வெவ்வேறு ஆரோக்கிய பானங்களை எடுத்துக்கொள்கின்றனர்.

உடல் எடை குறைக்க நினைக்கும் பலரும் காலையில் பல் துலக்கிய உடன் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் வெந்நீரில் தேன், எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கின்றனர்.

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு அருந்துவது உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல நன்மைகளைத் தரும் என்றாலும், அதனால் பின்விளைவுகளும் உண்டு.

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு எடுக்கும்போது அது நம்முடைய வயிற்றில் செரிமானத்துக்கு துணைபுரியும் ஹைட்ரோ குளோரிக்கும் அமிலத்துடன் இணைந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும்.

நெஞ்சு எரிச்சல், எதுகளிப்பு போன்ற பிரச்னைகளையும் இது ஏற்படுத்தலாம். வெறும் வயிற்றில் எலுமிச்சை எடுக்கும்போது அது சிறுநீர் அளவை அதிகரிக்கச் செய்து, உடலில் உள்ள தாதுஉப்புக்களை வெளியேற்றிவிடலாம்.

எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் வெந்நீரில் தேன் கலந்து குடிக்கலாம். இதனால், உடல் எடை குறையும். அதன் பிறகு எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலம் எந்த பிரச்னையும் வராது.

எலுமிச்சை சாறு கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கல்லீரல் ஆயிரக் கணக்கான பணிகளை செய்கிறது. எலுமிச்சை சாறு அதன் செயல்திறனைத் தூண்டுவதாக, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க, கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதை அதிகரிக்கிறது. செரிமான மண்டலத்தின் செயலை மேம்படுத்துகிறது.

உடல் எடை, தொப்பையைக் குறைக்க விரும்புகிறவர்கள் தினமும் காலையில் வெள்ளைப்பூசணி சாறு அருந்தலாம். தொடர்ந்து வெள்ளைப்பூசணி சாறு அருந்தி வந்தால் தொப்பை, ஊளைச்சதை குறையும். மேலும் இது உடல் சூட்டைக் குறைக்கும்.