கொரோனா பரவுவதை தடுக்க வினோத முயற்சி – கால்கள் மூலம் இயக்கப்படும் லிஃப்ட்

 

கொரோனா பரவுவதை தடுக்க வினோத முயற்சி – கால்கள் மூலம் இயக்கப்படும் லிஃப்ட்

சென்னை: கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் கால்கள் மூலம் இயக்கப்படும் லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆழமாக வேரூன்றி உள்ளது. இதுவரை 21 ஆயிரத்து 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 160 பேர் கொரோனா தொற்றுநோயால் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க புதுப் புது முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் கால்கள் மூலம் இயக்கப்படும் லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கைகளால் லிப்ட் பொத்தான்களை தொடுவது, கைப்பிடிகளை தொடுவதன் மூலம் கொரோனா பரவும் சாத்தியங்கள் இருப்பதால் இந்த முயற்சியை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ளது.