இலங்கையில் சட்டத்திருத்தம் – அதிபருக்கு குவியும் அதிகாரம்… எதிர்கட்சிகள் போர்க்கொடி

 

இலங்கையில் சட்டத்திருத்தம் – அதிபருக்கு குவியும் அதிகாரம்… எதிர்கட்சிகள் போர்க்கொடி

இலங்கையில் சமீபத்தில்தான் தேர்தல் முடிந்தது. கொரோனா கால பேரிடரின் மத்தியில் தேர்தலை நடத்தி முடித்தது அந்நாட்டு அரசு.

ராஜபக்‌ஷே தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ராஜபக்‌ஷே மீண்டும் பிரதமர் பதவியேற்றார். அவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ஷேதான் அந்த நாட்டின் அதிபர் என்பது தெரிந்த செய்தி.

தற்போது இலங்கை சட்டத் திருத்தம் 19-யை ரத்து செய்து புதிதாக 20-ம் சட்டத் திருத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் சட்டத்திருத்தம் – அதிபருக்கு குவியும் அதிகாரம்… எதிர்கட்சிகள் போர்க்கொடி

புதிய சட்டம் திருத்தம் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு பல அதிகாரங்களை வழங்குவதாக உள்ளது.

அதிபர் கோத்தபய முடிவு செய்தால், பாராளுமன்றம் அமைக்கப்பட்டு ஒராண்டு முடிந்ததும் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு அளிக்கப்படுகிறது.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்திரமாக முடிவெடுக்கும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மிக முக்கிய மூன்று ஆணையங்கள் கலைக்கப்படுமாம். இனி, அவற்றிற்கானன தலைவர் பதவிகளுக்கு உரியவர்களை அதிபரே நியமிப்பார். அதிபர் மீது விசாரணை நடத்த யாரும் உத்தரவிட முடியாது என்பது முக்கியமான அம்சம்,

இலங்கையில் சட்டத்திருத்தம் – அதிபருக்கு குவியும் அதிகாரம்… எதிர்கட்சிகள் போர்க்கொடி

அதேபோல பிரதமர் நினைத்தால் அமைச்சர்களை நீக்க முடியும் போன்ற பல விஷயங்கள் 20-ம் சட்டத் திருத்ததில் உள்ளன. இது இலங்கையின் அரசிதழில் வெளியாகியும் விட்டது.

இந்த 20-ம் சட்டத் திருத்தம் கூடாது என்று இலங்கையில் எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 19-ம் சட்டத் திருத்தத்தை பாதுகாக்க அனைவரையும் அழைத்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதேச.

தற்போது இலங்கையில் பரபரப்பாக விவாதிக்கக்கூடிய ஒன்றாக இந்த விஷயம் மாறிவிட்டது. பல ஊடகங்களும் இந்தச் சட்டத் திருத்தம் குறித்த சாதக, பாதகங்களை அலசத் தொடங்கியுள்ளன.