”2 பேட்டரிகளுடன் லெஜியான் டூயல் ஃபோன் – லெனோவோ திட்டம்” !

 

”2 பேட்டரிகளுடன் லெஜியான் டூயல் ஃபோன் – லெனோவோ திட்டம்” !

இந்தியாவில் லெஜியான் டூயல் என்ற 2 பேட்டரிகள் கொண்ட வித்தியாசமான பிரிமீயம் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த லெனோவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

”2 பேட்டரிகளுடன் லெஜியான் டூயல் ஃபோன் – லெனோவோ திட்டம்” !

ஏற்கனவே கடந்த ஜூலையில் இந்த போன் குறித்த அறிவிப்பு வெளிவந்த போது, இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த போன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்காது என கருதப்பட்ட நிலையில், லெனோவோ நிறுவனத்தின் இந்திய வலைதளத்தில் இதன் புகைப்படம் தற்போது இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் இந்த புதிய போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் விலை மற்றும் இது அறிமுகமாகும் தேதி உள்ளிட்ட விபரங்களை அதில் குறிப்பிடப்பட வில்லை.

”2 பேட்டரிகளுடன் லெஜியான் டூயல் ஃபோன் – லெனோவோ திட்டம்” !

இந்த போனின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, இரண்டு 2500 எம்ஏஎச் பேட்டரிகளை கொண்டு வித்தியாசமான போனாக வெளிவர உள்ளது. ஆக மொத்தம் 5000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த பேட்டரிக்கு 90 வாட்ஸ் டர்போ சார்ஜிங் சப்போர்ட் உண்டாம். அதன்படி, போனை முழுமையாக 30 நிமிடங்களிலும், 50 சதவீத பேட்டரியை 10 நிமிடத்திலும் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

”2 பேட்டரிகளுடன் லெஜியான் டூயல் ஃபோன் – லெனோவோ திட்டம்” !

மேலும் இந்த ஸ்மார்ட் போனானது ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், 6.65 இன்ச் கொண்ட அமோலெட் திரை, மற்றும் திரையில் விரல் ரேகை சென்சார், குவால்காம் ஸ்நாப்டிராகன் 865பிளஸ் பிராசசர், 16 ஜிபி டிடிஆர்5 ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய இரண்டு மெமரி என பிரிமீயம் சிறப்பம்சங்களை கொண்டது.

”2 பேட்டரிகளுடன் லெஜியான் டூயல் ஃபோன் – லெனோவோ திட்டம்” !

மேலும், கேமராவை பொறுத்தவரை பின்புறத்தில் 64 மெகா பிக்சல் மற்றும் 16 மெகா பிக்சல் செகண்டரி என 2 கேமராக்களும், முன்புறத்தில் பாப் அப் வடிவில் 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. மேலும் வைஃபை, புளூடூத், என்எப்சி, 2 யுஎஸ்பி டைப் சி போர்டுகள் என சகல வசதிகளை கொண்டுள்ள இந்த போன், இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை என்றாலும், கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்