கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை

 

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை

கரூர்

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நடுத்தர, வறுமையில் வாடும் மக்களின் குடும்ப தேவைக்காக வாங்கும் கடனுக்காக, அவர்களின் அவசர தேவையை பயன்படுத்தி கடன் கொடுப்போர் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என வசூலிக்கின்றனர். மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் வாங்கிய மக்கள், வட்டியும் கட்ட இயலாமல், அசலும் தர முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பணத்தை வசூலிக்க அடியாட்களை வைத்து மிரட்டி, கந்துவட்டி வசூலில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்க 1957-ஆம் ஆண்டில் தமிழ்நாடு கடன் கொடுப்பவர் நெறிப்படுத்தும் சட்டமும், 2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு கந்துவட்டி வசூலித்தல் தடை சட்டமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்சமயம் கொரோனா காலகட்டத்தில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாத சூழலில் மக்கள் பலர் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விகையில் மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி தலைமையில் வட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை

இந்த குழுக்கள் கந்து வட்டி தொடர்பான புகார்களை உடனடியாக விசாரித்து, கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக வாரம்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தும். கந்துவட்டி தொடர்பான புகார்களை மக்கள் சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலரிடமோ, வட்டாட்சியரிமோ, கோட்டாட்சியரிடமோ அளிக்கலாம். அல்லது. மாவட்டத்தின் பிரத்யேக வாட்ஸ்அப் எண் 94898 40055, டிவிட்டரில் @CollectorKarur, வருவாய் கோட்டாட்சியர்கள் 04324 – 274038, வாட்ஸ் அப் எண்- 94450 00453 (கரூர்), 04323 – 222395, வாட்ஸ் அப எண் 94450 00454(குளித்தலை)

வட்டாட்சியர்கள் – 04324 – 260745, வாட்ஸ்அப் எண் 94450 00598 (கரூர்), 04323-222015, வாட்ஸ்அப் எண் – 94450 00600(குளித்தலை), 04320- 230170, வாட்ஸ்அப் எண் 94450 00599 (அரவக்குறிச்சி), 04320 -230170, வாட்ஸ்அப் எண் – 94450 00601(கிருஷ்ணராயபுரம்), 04323 -251444, வாஸ்ட்அப் எண் – 94454 61822 (கடவூர்), 04324 – 288334, வாட்ஸ்அப் எண் – 94454 61817(மண்மங்கலம்), மற்றும் புன்செய் புகழுர் வாட்ஸ்அப் எண் – 72004 40680 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.