இடதுசாரி-காங்கிரஸ் இடையே எந்த தவறான புரிதலும் இல்லை… ஒன்றாக போட்டியிடுவோம்.. இடது முன்னணி தகவல்

இடதுசாரி-காங்கிரஸ் இடையே எந்த தவறான புரிதலும் இல்லை… ஒன்றாக போட்டியிடுவோம்.. இடது முன்னணி தகவல்

மேற்கு வங்கத்தில் இடதுசாரி-காங்கிரஸ் இடையே எந்த தவறான புரிதலும் இல்லை, எதிர்வரும் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவோம் என்று இடது முன்னணி (இடதுசாரி கட்சிகளின் கூட்டணி) உறுதியாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசும், இடதுசாரிகளும் இணைந்து போட்டியிட உள்ளன. இந்த சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுகதா ராய் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடதுசாரியும், காங்கிரசும் உண்மையில் பா.ஜ.க.வுக்கு எதிரானவை என்றால், காவி (பா.ஜ.க.) கட்சியின் மதவாத மற்றும் பிளவுப்படுத்தும் அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் மம்தா பானர்ஜியின் பின்னால் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இடதுசாரி-காங்கிரஸ் இடையே எந்த தவறான புரிதலும் இல்லை… ஒன்றாக போட்டியிடுவோம்.. இடது முன்னணி தகவல்
பிமன் போஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அழைப்பை கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும் நிராகரித்தன. தற்போது இடது முன்னணி (இடதுசாரி கட்சிகள்) காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இடது முன்னணியின் தலைவர் பிமன் போஸ் இது தொடர்பாக கூறியதாவது: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும், பா.ஜ.க.வும் மத ரீதியில் வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கின்றன. மேற்கு வங்கத்தை அதிலிருந்து காப்பாற்ற நாங்கள் (காங்கிரஸ், இடது முன்னணி) ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவோம்.

இடதுசாரி-காங்கிரஸ் இடையே எந்த தவறான புரிதலும் இல்லை… ஒன்றாக போட்டியிடுவோம்.. இடது முன்னணி தகவல்
மம்தா பானர்ஜி, பா.ஜ.க.

எங்களுக்கு இடையே எந்த தவறான புரிதலும் இல்லை. இருப்பினும் இன்னும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆக மேற்கு வங்கத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை (பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடது முன்னணி) போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.