நாளை முதல் கல்லூரிகளுக்கும் விடுமுறை-உயர் கல்வித்துறை

 

நாளை முதல் கல்லூரிகளுக்கும் விடுமுறை-உயர் கல்வித்துறை

கடந்த மாதத்திலிருந்து வருட கடைசி வரை கொரோனாவின் தீவிரம் குறையாமல் இருந்ததால் இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. மாணவர்கள் ஆன்லைன் மூலமே பாடம் படித்துவந்தனர். இந்தாண்டு ஜனவரி மாதம் தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக கொரோனா நெறிமுறைகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் பாடசாலைகள் திறக்கப்பட்ட இரு மாதங்களிலேயே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

நாளை முதல் கல்லூரிகளுக்கும் விடுமுறை-உயர் கல்வித்துறை

இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்ததையடுத்து நாளை முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனவும் கல்லூரிகள் நேரடியாக மாணவர்களுக்கு நடைபெறாது எனவும் உயர்க்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வாரத்தில் 6 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் என அறிவித்துள்ள உயர் கல்வித்துறை, “ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும்” எனவும் குறிப்பிட்டுள்ளது.