’41 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது’ : இந்திய ஹாக்கி அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

 

’41 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது’ : இந்திய ஹாக்கி அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை கைப்பற்றி சாதனை இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

’41 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது’ : இந்திய ஹாக்கி அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெண்கல பதக்கத்தை வெல்ல சிறப்பான ஆட்டம். 41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஹாக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி டீமுக்கு வாழ்த்துக்கள். நான் உறுதியாக நம்புகிறேன், #டோக்கியோ 2020இல் இந்த வெற்றியுடன் இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், வரலாற்று சாதனை! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். எங்கள் ஹாக்கி அணிக்கு இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுளளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள பதிவில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். அணி திறமைகள், நெகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான உறுதியை இந்த போட்டி காட்டியது. இந்த வரலாற்று வெற்றி ஹாக்கியில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.