ஒலிம்பிக்கில் சரித்திர சாதனை படைத்து வாழ்த்து மழையில் நனையும் நீரஜ் சோப்ரா

 

ஒலிம்பிக்கில் சரித்திர சாதனை படைத்து வாழ்த்து மழையில் நனையும் நீரஜ் சோப்ரா

100 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளத்தில் பதக்கம் – டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்ஸ் தொடரின் தனி நபர் போட்டிகளில் தங்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

ஒலிம்பிக்கில் சரித்திர சாதனை படைத்து வாழ்த்து மழையில் நனையும் நீரஜ் சோப்ரா

நீரஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”டோக்கியோவில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா இன்று நடத்திய சாதனை எப்போதும் நினைவுகூரப்படும். இப்போட்டியில் துடிப்பு மிக்க இளைஞரான நீரஜ் சோப்ரா சிறப்பாக விளையாடி தனது திறனைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு தனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நீரஜ் சோப்ராவின் வரலாறு காணாத வெற்றி.. உங்கள் ஈட்டி எறிதல் தங்கம் தடைகளை உடைத்து புதிய வரலாற்றை படைத்துள்ளது. உங்கள் முதல் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் டிராக் அண்ட் ஃபீல்ட் பதக்கத்தை கொண்டு வந்தீர்கள். உங்கள் சாதனை நம் இளைஞர்களை ஊக்குவிக்கும். இந்தியா மகிழ்ச்சியடைகிறது! மனமார்ந்த வாழ்த்துக்கள்!” எனக் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து பதிவில், “இந்திய விளையாட்டுத்துறையில் மறக்க முடியாத ஒருநாள். கோடிக்கணக்கானோரின் இதயத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள்; உண்மையான தேசிய ஹீரோ”எனக் குறிப்பிட்டுள்ளார்.