உயர்நீதிமன்றத்திற்கு வரும் 13 ஆம் தேதி 2 மணி நேரம் மட்டும் வழக்கறிஞர்கள் வர அனுமதி! ஏன் தெரியுமா?

 

உயர்நீதிமன்றத்திற்கு வரும் 13 ஆம் தேதி 2 மணி நேரம் மட்டும் வழக்கறிஞர்கள் வர அனுமதி! ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு அனைத்து நீதிமன்ற பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட பட்டிருந்தது. கீழமை நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. ஊரடங்கால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவசர மற்றும் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொல்லப்படுகிறது.

ttn

இந்நிலையில் ஊரடங்கினால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்களின் அறைகளில் எடுக்க முடியாமல் உள்ள வழக்கு ஆவணங்கள், லேப்டாப், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல வரும் 13 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை அனுமதிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.