விருத்தாச்சலத்தில் ஓடும் காரில் தீப்பற்றிய விபத்தில், வழக்கறிஞர் உயிரிழப்பு

 

விருத்தாச்சலத்தில் ஓடும் காரில் தீப்பற்றிய விபத்தில், வழக்கறிஞர் உயிரிழப்பு

விருதாச்சலத்தில் ஓடும் காரில் தீப்பற்றிய விபத்தில் வழக்கறிஞர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த ராமச்சந்திரன் பேட்டையில் வசிப்பவர் வழக்கறிஞர் கவியரசு(37). இவரது மனைவி மணிமேகலை. இவர் விருதாச்சலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று கவியரசு, தனது காரில் விருதாச்சலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். தரிசனத்தை முடித்துக்கொண்டு காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். விருத்தாச்சலம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது அவரது காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது.

விருத்தாச்சலத்தில் ஓடும் காரில் தீப்பற்றிய விபத்தில், வழக்கறிஞர் உயிரிழப்பு

இதனால் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவர் வெளியேற முயற்சி செய்தார். ஆனால், அதற்குள்ளாக கார் முழுவதும் தீ பரவியதால் நெருப்புக்குள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் காரில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், தகவல் அறிந்து தீயணைபுத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள்ளாக கவியரசு தீயில் சிக்கி உடல்கருகி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.