வேளாண் மசோதாக்கள் தொடர்பாக காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது.. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது.. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக பொய்களை பரப்புவதாக காங்கிரஸ் கட்சியை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: விவசாயிகளின் நலன் பிரச்சினையில் காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது. ஏனெனில் அது இடைத்தரகர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அது மசோதாக்களை எதிர்க்கிறது. மத்திய அரசால் இப்போது என்ன செய்யப்பட்டுள்ளதோ அதை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது.. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்

காங்கிரஸ் தனது 2019 தேர்தல் அறிக்கையில் இதைத்தான் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் 2017ல் காங்கிரஸ் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா ஒப்பந்த விவசாயத்தை தொடங்கினார். விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க சந்தைகளை வழங்க வேண்டும் என கமல் நாத் தெரிவித்தார். தற்போது நாங்கள் அறிமுகம் செய்துள்ள மசோதாவை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது.. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
விவசாயிகள்

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். இன்று ராபி பருவ பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளோம். ஆயினும் காங்கிரஸ் வதந்திகளை பரப்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.