• April
    06
    Monday

Main Area

Main



இந்தியாவில் ரூ.4829 விலை கொண்ட லாவா இசட்53 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Lava Z53
Lava Z53

டெல்லி: லாவா நிறுவனத்தின் ‘லாவா இசட்53’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4829 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லாவா நிறுவனம் தனது இசட் சீரீஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் ‘லாவா இசட்53’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.4829 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ப்ரிசம் ரோஸ் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்திலும், பிற ஆஃப்லைன் ஷோரூம்களிலும் ‘லாவா இசட்53’ ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில் பிரத்தியேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் இடம்பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, உருது, பெங்காலி, மராத்தி என்று 8 இந்திய மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. 4120 எம்.ஏ.ஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருப்பதால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் நீடிக்கும் என்று கருதப்படுகிறது. லாவா இசட்53 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, யுனாசாக் எஸ்.சி.9832இ குவாட் கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 16ஜிபி மெமரி, 8 எம்.பி பிரைமரி கேமரா, 5 எம்.பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 9.0 பை, டூயல் சிம் ஸ்லாட், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 4.2 ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.