தஞ்சையில் விவிபேட் இயந்திரம் குறித்து விழிப்புணர்வு வாகன சேவை துவக்கம்!

 

தஞ்சையில் விவிபேட் இயந்திரம் குறித்து விழிப்புணர்வு வாகன சேவை துவக்கம்!

தஞ்சாவூர்

தஞ்சையில் ஒப்புகைச்சீட்டு உடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகன சேவையை இன்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழவாசல் பகுதியில், விவிபேட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு வாகன சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தா ராவ் கலந்துகொண்டு நடமாடும் வாகன சேவையை தொடங்கிவைத்தார்.

தஞ்சையில் விவிபேட் இயந்திரம் குறித்து விழிப்புணர்வு வாகன சேவை துவக்கம்!

தொடர்ந்து, அந்த பகுதி பொதுமக்களுக்கு ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதேபோல், கீழவாசல் டவுன் கீழகரம்பை குயவர் தெருவில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவத்தினையும் ஆட்சியர் கோவிந்தா ராவ் வினியோகம் செய்தார்.