அரசியலில் மட்டுமல்ல… குடும்பத்தின் உள்ளேயும் புயலை கிளப்பிய பிராணப் முகர்ஜியின் புத்தகம்

 

அரசியலில் மட்டுமல்ல… குடும்பத்தின் உள்ளேயும் புயலை கிளப்பிய பிராணப் முகர்ஜியின் புத்தகம்

விரைவில் வெளிவர உள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிரெஸிடென்சியல் இயர்ஸ் புத்தகம் அரசியலில் மட்டுமல்ல அவரது வாரிசுகள் இடையேயும் மோதலை உருவாக்கி உள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியிலிருந்தபோது அவர் சந்தித்த நிகழ்வுகள் குறித்து பிரெஸிடென்சியல் இயர்ஸ் என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக தகவல். இந்த புத்தகம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. ஆனால் அதற்கு முன்னே அந்த புத்தகம் அரசியலில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரணாப் முகர்ஜியின் குடும்பத்துக்குள் இந்த புத்தகம் மோதலை ஏற்படுத்தியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மகனும், மகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியலில் மட்டுமல்ல… குடும்பத்தின் உள்ளேயும் புயலை கிளப்பிய பிராணப் முகர்ஜியின் புத்தகம்
அபிஜித் முகர்ஜி

காலம் சென்ற பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, ரூபா புக்ஸ் நிறுவனத்தின் கபிஸ் மெஹ்ராவுக்கு டிவிட்டரில், பிரெஸிடென்சியல் இயர்ஸ் மெமரியர்ஸ் ஆசிரியரின் மகனான நான் அந்த புத்தகத்தை வெளியிடுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், எனது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி சில ஊடக தளங்களில் வலம் வரும் உந்துதல் பகுதிகளையும் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். என் தந்தை இல்லை என்பதால் நான் அவருடைய மகனாக, அந்த புத்தகத்தின் இறுதி நகலின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு முன் நான் பார்க்க விரும்புகிறேன்.

அரசியலில் மட்டுமல்ல… குடும்பத்தின் உள்ளேயும் புயலை கிளப்பிய பிராணப் முகர்ஜியின் புத்தகம்
ஷர்மிஸ்தா முகர்ஜி

என் தந்தை இன்று உயிருடன் இருந்திருந்தால், அவரும் அவ்வாறே செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். இது தொடர்பாக ஒரு விரிவான கடிதத்தை நான் ஏற்கனவே உங்களுக்கு நான் அனுப்பியுள்ளேன். இது விரைவில் உங்களில் அடையும். அன்புடன் அபிஜித் முகர்ஜி என்று பதிவு செய்து இருந்தார். இதனையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் அபிஜித் முகர்ஜியின் சகோதரி ஷர்மிஸ்தா முகர்ஜி டிவிட்டரில், பிரெஸிடென்சியல் இயர்ஸ் மெமரியர்ஸ் ஆசிரியரின் மகளான நான், நமது தந்தை எழுதிய கடைசி புத்தகத்தின் வெளியீட்டில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று எனது சகோதரர் அபிஜித் முகர்ஜியிடம் கேட்டுக் கொள்கிறேன். அவர் நோய்வாய்ப்படுதவற்கு முன்பே கையெழுத்துப் பிரதியை நிறைவு செய்தார் என்று பதிவு செய்து இருந்தார்.