• December
    13
    Friday

Main Area

Main



டி.டி.வி.தினகரன் கையிலெடுக்கும் கடைசி ஆயுதம்... அதிமுகவை கைப்பற்றுவாரா..?

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சசிகலாவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் எனத் துடிக்கிறார்.

sasikala

உள்ளாட்சி தேர்தலுக்குள் நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை வெளியே கொண்டு வரவேண்டும். உள்ளாட்சி தேர்தல் வரும் பட்சத்தில் சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள், பதவி பெற்றவர்கள் மீண்டும் தன்னை உருவாக்கியவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா பக்கம் வரலாம்.

ttv dinakaran

அதன் பிறகு நடக்கும் பொதுக்குழு, செயற்குழுவில் தன் ஆட்கள் மூலம் கலாட்டா செய்து கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது டி.டி.வி.தினகரனின் திட்டம். அதற்கு சசிகலாவின் முகம் தேவைப்படுகிறது. அதுதான் காரணம். அவருடைய முகத்தை பார்ப்பவர்கள், நேரடியாகவோ, ரகசியமாகவே ஆதரவு தெரிவிக்கலாம். சசிகலா சொன்னதை செய்வாராம்.

ttv dinakaran

யாருக்கும் தொல்லை தர மாட்டாராம். ஆனால் டி.டி.வி.தினகரன் பணம் கேட்டும், கெத்து காட்டியும் கட்சி நிர்வாகிகளை மட்டுமில்ல.. ரத்த சொந்தங்களை கூட விரட்டிவிடுவாராம். இதனால் நம்மளை யாரும் நம்ப மாட்டாங்க... சசிகலாவை வைத்துத் தான் அதிமுகவை மடக்க வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் புலம்பி வருகிறாராம் டி.டி.வி.தினகரன்

2018 TopTamilNews. All rights reserved.