சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடைசி இடம் – ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடைசி இடம் – ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்

ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. சில போட்டிகளில் ஆட்டத்தின் கடைசி பந்து வரை த்ரிலாகச் செல்கின்றன. ஐபிஎல் இந்த சீசனில் மட்டும் இதுவரை இருமுறை சூப்பர் ஓவர் நடைபெற்று அதன் வழியாக வெற்றி தோல்வி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடைசி இடம் – ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்

தற்போது எட்டு அணிகளும் தலா மூன்று பேட்டிகளில் ஆடி முடித்திருக்கின்றன. இந்நிலையில் ஒவ்வோர் அணியும் எடுத்த பாயிண்ட்டுகளின் அடிப்படையில் பாயிண்ட் டேபிளில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.

மூன்று போட்டிகளில் ஆடி, அவற்றில் 2 -ல் வென்று நெட் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ். அதனை அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரண்டில் வென்று 4 பாயிண்ட்டுகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடைசி இடம் – ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றில் இரண்டில் வென்று 3 மூன்றாம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மூன்றில் இரண்டில் வென்று நான்காம் இடத்திலும் உள்ளன.

மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற அணிகள் பஞ்சாப், மும்பை, ஹைதராபாத், சென்னை.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடைசி இடம் – ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்

இவற்றில் நெட் ரன்ரேட் அடிப்படையில், ஐந்தாம் இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இடம்பிடித்துள்ளது. ஆறாம் இடத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி தக்க வைத்துள்ளது.

ஏழாம் இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது. எட்டாம் இடத்தில் அதாவது கடைசி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடைசி இடம் – ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்

ஒவ்வோர் அணிக்கும் 14 போட்டிகள் உள்ளன. இப்போதைய நிலை என்பது ஆரம்ப நிலைதான் என்றாலும், தொடக்கம் முதலே நெட் ரன்ரேட்டை மெயிண்டெய்ன் செய்தால்தான் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்வதில் சிக்கல் இருக்காது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் கூறுகையில், சென்றமுறை கூட இப்படித்தான் பாயிண்ட் டேபிளில் கீழே இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று மேலே வந்துவிடுவோம்’ என்றுள்ளார்.