darbar
  • January
    18
    Saturday

Main Area

Mainசூப்பர் ஸ்டாராகவும் இருப்பார்,நடிகர் திலகமாகவும் தெரிவார்! இயக்குனர் மகேந்திரன் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன்

பிரபாகரன் - மகேந்திரன்
பிரபாகரன் - மகேந்திரன்

தமிழ் சினிமா ஆளுமை மகேந்திரன் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அவருடன் பணியாற்றிய பலரும் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

அவர் கடைசியாக பணியாற்றிய திரைப்படம் பேட்ட, பூமராங் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. சுந்தர பாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மகேந்திரன் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"இன்னும் மனதிற்குள ; நிழலாடுகிறது அந்தபயணம். அது ஒரு மாலைநேரம், எனது “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கக்கேட்டு, கதை சொல்வதற்காக, பழம்பெரும் இயக்குனர் திரு.மகேந்திரன் சார் அவர்களை சந்திக்க, பள்ளிக்கரனை அருகிலுள்ள அவரது இல்லம் நோக்கி கார் சென்றுக்கொண்டிருந்தது, மனதிற்குள் சிறு பதட்டமும், பயமும் தொற்றிக்கொள்கிறது. 

முள்ளும் மலரும் துவங்கி உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே என தொடர்ந்த நினைவுகள் “மெட்டிஒலி காற்றோடு, என் நெஞ்சை தாலாட்ட..” என்று மெட்டி திரைப்படத்தில் மூன்று பெண்கள் பாடும் பாடல் காட்சி நினைவுக்கு வர, அதில ; ஒருவர் மாநிறமும், மற்ற இருவரும் கருப்பு நிறமும் என மூன்றுபேரை வைத்துக்கொண்டு, எந்த மேக்கப்பும் இல்லாமல் அவர்களை பேரழகிகளாய் காட்டிய விதம் சொல்லித்தீராது அவரது திறமை. எந்த அளவு தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்திருந்தால்.! அப்படி ஒரு படைப்பைத்தர முடிந்திருக்கும் அவரால ;.! என எண்ண, எண்ண சிறு உதறலோடு அவரது இல்லத்தின் முன் சென்று இறங்கினேன்.

மகேந்திரன்

பதட்டம் குறையாமல், அதை வெளியேயும் காட்டிக்கொள்ளாமல், வீட்டிற்குள் செல்ல காத்திருக்க., எனது மேனேஜர், மகேந்திரன் சாரின் மனைவியிடம் விசயத்தை சொன்னார். விபரத்தை கேள்விப்பட்ட அவர், சற்றும் எதிர்பாராத விதமாக நாற்காலியில் இருந்து எழுந்து, வீட்டின் கதவு வரை வந்து “வாங்க பிரபாகர்” என்று ஆரத்தழுவி உள்ளே அழைத்து செல்கிறார். உச்சி முதல் உள்ளங்கால் வரை மெய்சிலிர்த்து விட்டது. எனக்கு திரைப்படங்களுக்கென உள்ள அனைத்து விருதுகளையும் ஒரே நொடியில் பெற்ற மகிழ்ச்சி.

என் முதல் படைப்பை பற்றி நீண்ட நேரம் பேசப் பேச நான் சொல்ல வந்த கதையை மறந்து விடுவேனோ என பதட்டம் கூட ஆரம்பித்து விட்டது எனக்கு  என் பதட்டம் அறிந்து,என்னை நிதானமாக்கி மெல்ல கதையையும், அவரது கேரக்டரையும் கேட்டவர், இது என் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்று கூறி,நடிக்க ஒப்புக்கொண்டார்.வானத்தில் பறப்பது என்று எழுதியும், சொல்லியும் கேட்டிருப்போம், அதை நான் உணர்ந்த நொடி அது.

அன்று துவங்கிய உறவு இன்னும் நெருக்கமாகி, ஒரு தந்தையுடன் பயணிக்கும் மகன் என்ற உணர்வலையில் வந்து நின்றது. அதிகாலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் அவர், 79 வயதிலும் இரவு நடுநிசி வரை ஓய்வெடுக்காமல் நடித்து கொடுத்த விதம், திரைத்துறை மீது அவருக்கு இருந்த காதலை என்னால் உணர முடிந்தது. சில நேரங்களில் சூப்பர் ஸ்டாரை நடிக்க வைத்துக்கொண்டிருக்கிறோமோ என மிரளவைப்பார். பல நேரங்களில் நடிகர் திலகத்தை நினைவூட்டி என்னை பிரமிக்கவும் செய்தார்.

மகேன்

நான் கூறுவது, இன்று மிகைப்படுத்தப்பட்டதாக கூட உங்களுக்கு தோன்றலாம். ஆனால் “கொம்புவச்சசிங்கம்டா” திரைப்படம் திரைக்கு வரும் போது, இவை அனைத்தும் உண்மை என நீங்களும் உணர்வீர்கள். இன்று அவர் நம்மோடு இல்லை, இதை உதடுகள் சொன்னாலும்., மனம் மட்டும் ஏனோ ஒப்புக்கொள்ள மறுக்கிறது. முள்ளும் மலரும் காளி துவங்கி, மெட்டி ஒலி பெண்கள் வரை, அவரது கதாபாத்திரங்கள் கண்முன்னே நிழலாடுகின்றன.நிஜமாய் நீங்கள் எங்களை விட்டு மறைந்தாலும்,
நிழலாய் என்றும் எங்களுடனே இருப்பீர்கள் அப்பா!" என்று சொல்லும்போது கண் கலங்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

 

2018 TopTamilNews. All rights reserved.