ஈரோடு- சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்; குவிந்த பட்டதாரிகள்!

 

ஈரோடு- சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்; குவிந்த பட்டதாரிகள்!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று பட்டதாரி பெண்கள் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு பணிக்கு 201 காலி பணியிடங்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி, நேரடியாக ஆட்களை தேர்வு செய்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தினமும் நூற்றுக் கணக்கான பெண்கள் வரிசையில் காத்திருந்து சத்துணவு பணிக்கு விண்ணப்பித்தனர்.

ஈரோடு- சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்; குவிந்த பட்டதாரிகள்!

இதில் அதிருப்தி அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால், பட்டதாரி பெண்களும் இந்த பணிக்காக முந்தியடித்து விண்ணப்பிக்கின்றனர். இந்த பணிக்கு 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையிலும், வேலையில்லா திண்டாட்டத்தால் பட்டதாரிகள் விண்ணப்பிக்க குவிகின்றனர். நேற்று வரை 201 காலிபணியிடங்களுக்கு சுமார் 2,900 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. குறிப்பாக இன்று கடைசி நாள் என்பதால் வழக்கமாக இருப்பதை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

ஈரோடு- சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்; குவிந்த பட்டதாரிகள்!

இது குறித்து பேசிய சத்துணவுத்துறை அதிகாரிகள், ஒரே நபர் இருவேறு சத்துணவு பணிகளுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தகுதியின் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்டோரும் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும், இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் கூறினர்.