குவிந்தது வர்த்தக ஒப்பந்தம்… எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.2,467 கோடி லாபம்…

குவிந்தது வர்த்தக ஒப்பந்தம்… எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.2,467 கோடி லாபம்…

2020 டிசம்பர் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,467 கோடி ஈட்டியுள்ளது.

அடிப்படை கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்டு டி) கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,467 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 4.9 சதவீதம் அதிகமாகும்.

குவிந்தது வர்த்தக ஒப்பந்தம்… எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.2,467 கோடி லாபம்…
எல் அண்டு டி

எல் அண்டு டி குழுமம் கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.73,233 கோடிக்கு புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 76 சதவீதம் அதிகமாகும். எல் அண்டி டி நிறுவனம் பெற்ற மொத்த ஆர்டரில் 14 சதவீதம் சர்வதேச ஒப்பந்தங்களாகும். கடந்த டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துக்கு மொத்தம் 1.24 லட்சம் கோடி மதிப்புக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.

குவிந்தது வர்த்தக ஒப்பந்தம்… எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.2,467 கோடி லாபம்…
எல் அண்டு டி

2020 டிசம்பர் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.35,596.40 கோடியாக உள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 1.8 சதவீதம் குறைவாகும். மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்த போது எல் அண்டு டி நிறுவன பங்கின் விலை 0.12 சதவீதம் குறைந்து ரூ.1,361.45ஆக இருந்தது.