நங்கூரம் பாய்ச்சிய ஸ்மித் – லபுஷேன் ஜோடி – திணறும் இந்திய பவுலர்கள்! #IndVsAus

 

நங்கூரம் பாய்ச்சிய ஸ்மித் –  லபுஷேன் ஜோடி – திணறும் இந்திய பவுலர்கள்! #IndVsAus

மூன்றாம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி வருகிறார்கள். இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேயான, ஒருநாள் போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் இந்திய அணியும் வென்றுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

நங்கூரம் பாய்ச்சிய ஸ்மித் –  லபுஷேன் ஜோடி – திணறும் இந்திய பவுலர்கள்! #IndVsAus

ஜனவரி 7-ம் தேதி தொடங்கிய மூன்றாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார்.

அடுத்து ஆடிய இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா – கில் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. இவர்களில் ரோஹித் ஷர்மா 26 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார்.

நங்கூரம் பாய்ச்சிய ஸ்மித் –  லபுஷேன் ஜோடி – திணறும் இந்திய பவுலர்கள்! #IndVsAus

கில் – புஜாரா ஜோடி நிலைத்து ஆடியது. இருவரும் தலா 50 ரன்கள் எடுத்தனர். அதற்கு அடுத்து வந்த வீரர்களில் பண்ட் தவிர 30 ரன்களைக்கூட தாண்ட வில்லை. மேலும் விரைவிலேயே ஆட்டமிழந்தனர்.

ரஹானா 22, விஹாரி 4, ரிஷப் பண்ட் 36, அஷ்வின் 10, சைனி 3, பும்ரா 0, சிராஜ் 6 என்று வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தனர். மறுபுறம் ஜடேஜா 28 ரன்களோடு ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு இணையாக எதிர்முனையில் ஆட யாருமே இல்லாததால் இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்தி 244 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை விட 94 ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறது.

நங்கூரம் பாய்ச்சிய ஸ்மித் –  லபுஷேன் ஜோடி – திணறும் இந்திய பவுலர்கள்! #IndVsAus

அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. வார்னர் – புகோவ்ஸ்கி ஜோடி ஓப்பனிங் இறங்கியது. முறையே 13, 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்க்ஸிலும் வார்னர் 5 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. அவர் முழுமையான உடல்தகுதி பெறவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. லபுஷேன், ஸ்மித் ஜோடி ஆடி வருகிறது.

தொடக்க வீரர்களை குறைவான நேரத்தில் இழந்துவிட்டாலும் அனுபவம் மிக்க வீரர்கள் லபுஷேன் மற்றும் ஸ்மித் இருவரும் நங்கூரம் பாய்ச்சியதைப் போல நிலைத்து ஆடி வருகிறார்கள். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 29 ஓவர்கள் முடிவில் 103 ரன்களை ஆஸ்திரேலிய வீரர்கள் எடுத்துள்லனர். இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

நங்கூரம் பாய்ச்சிய ஸ்மித் –  லபுஷேன் ஜோடி – திணறும் இந்திய பவுலர்கள்! #IndVsAus

இந்திய அணியை விட 197 ரன்கள் அதிகம் அடித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்ட நேரம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி 350 + ரன்களை இந்தியாவுக்கு இலக்காக வைக்கும். அதனை ஒரே நாளில் அடிப்பது என்பது இப்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சிரமம். எனவே, இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க நிதானமாக ஆடி போட்டியை ட்ராவாக்க வேண்டும்.