லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் இல்லை

 

லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் இல்லை

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் மகத்தான வெற்றிகளைப் பெற்றுவருகின்றன. கோடைக்காலத்தின் மாபெரும் கேளிக்கை கொண்டாட்டமாக நடத்தப்படுகிறது ஐபிஎல் போட்டி.

பொழுதுபோக்கு, விளையாட்டு என்பதைக் கடந்து இரண்டு விஷயங்களையும் செய்தது ஐபிஎல். ஒன்று, இளம் கிரிக்கெட் வீரர்களை உலகிற்கு அடையாளம், அவர்களின் திறமைக்கு ஆடுகளத்தைத் திறந்துவிட்டது. மற்றொன்று, பல கோடி ரூபாய் லாபம். இந்த இரண்டு மற்ற நாடுகளில் இதுபோன்ற போட்டிகளை நடத்தத் தூண்டியது.

லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் இல்லை

அப்படித்தான் இலங்கை நாட்டிலும் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஸ்ரீ லங்கா பிரீமியர் லீல் (SLPL)  என்று பெயரிட்டு, 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆறு அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

2020 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடத்தப்படுவதாக ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய்த் தொற்றால் உலகமே முடங்கியிருக்கும் நேரத்தில் இது சாத்தியம்தானா… என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. ஏனெனில், இலங்கையில் கொரோனா நோய்த் தொற்று குறைவுதான் எனினும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அந்நாட்டு அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கூடிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை, ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இப்போது இல்லை. நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.