கொரோனா செய்திகளை வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்கு.. ஜெகன் மோகன் அரசு மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

கொரோனா செய்திகளை வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்கு.. ஜெகன் மோகன் அரசு மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அரசியலமைப்புக்கு முரணாக செயல்படுவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் லங்கா தினகர் கூறியதாவது: ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கம் அரசியலமைப்பின் 19 மற்றும் 21வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அச்சு மற்றும் மின்னணு ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்வதன் மூலம் மீறுகிறது. அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் வழக்குகள் தற்போது ஒரு நாளைக்கு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளன.

கொரோனா செய்திகளை வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்கு.. ஜெகன் மோகன் அரசு மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

அண்மையில் நெல்லூர் மாவட்டத்தில் இசட்.பி. பள்ளியின் தலைமையாசிரியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் தனது பரிதாபகரமான நிலைமைகள் குறித்து அரசுக்கு தெரிவிப்பதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு அவர் பரிதாபமாக கொரோனாவுக்கு பலியாகி விட்டார். தலைமையாசிரியரின் வீடியோ ஒரு செய்தி சேனலும், மற்ற ஊடகங்களும் வெளியிட்டன. உடனே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, எம்.டி. மற்றும் செய்தி வாசிப்பாளரை குறிவைத்து வழக்கு பதிவு செய்துள்ளது.

கொரோனா செய்திகளை வெளியிட்டால் ஊடகங்கள் மீது வழக்கு.. ஜெகன் மோகன் அரசு மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

இதுதான் ஊடகங்களை நடத்துவதற்கான வழியா? கடந்த சில மாதங்களுக்கு முன், இதே சேனலின் மதிப்பீட்டாளர் மற்றும் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் செயல்களை கேள்விக்குள்ளாக்கியது. ஜெகன் மோகன் ரெட்டி அரசியலமைப்புக்கு முரணாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.