தொடர் கன மழை… தேசிய நெடுஞ்சாலையின் 8 இடங்களில் நிலச்சரிவு… 150 பேர் சிக்கி தவிப்பு!

தொடர் கன மழை… தேசிய நெடுஞ்சாலையின் 8 இடங்களில் நிலச்சரிவு… 150 பேர் சிக்கி தவிப்பு!

தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சம்பாவத் மாவட்டத்தின் தனக்பூர்-காட் தேசிய நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் கன மழை… தேசிய நெடுஞ்சாலையின் 8 இடங்களில் நிலச்சரிவு… 150 பேர் சிக்கி தவிப்பு!

இதில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், சம்பாவத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பத்திரமாக மீட்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறைகள் மற்றும் கற்பாறைகளை அகற்றும் பணியில் பேரிடர் மேலாண்மை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.