மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

 

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன.

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

அதன்படி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மண்ணுக்குள் புதைந்த அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்டத்தின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

இந்நிலையில் கேரள நிலச்சரிவில் இதுவரை சுமார் 8 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும் கன மழை காரணமாக மீட்பு பணியில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.