கொச்சின்-தேனி தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம்!

கொச்சின்-தேனி தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம்!

கொச்சின்-தேனி தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

கொச்சின் – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையானது கேரளாவில் 150 கி.மீ., தமிழகத்தில் 290 கி.மீ., துாரம் வரை செல்கிறது. இது தவிர புதிய நெடுஞ்சாலை அமைக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி கொச்சி-தேனி இடையே புதிய வழித்தடத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கொச்சின்-தேனி தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம்!

இந்த நெடுஞ்சாலையானது எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியிலிருந்து கணயனுார், குன்னத்துநாடு, மூவாற்றுபுழா, கோதமங்கலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா, தேவிகுளம், இடுக்கி, உடும்பன்சோலை தாலூகாக்கள் வழியே செல்கிறது. அங்கிருந்து ஆனக்கல், தேவாரம் வழியே தேனியை சென்றடைகிறது.

கொச்சின்-தேனி தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம்!

அதேசமயம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்பில்லாத வகையில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் கொச்சின்-தேனி பயண தொலைவு 100 கி.மீ., குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.