அவர் மீது நடவடிக்கை எடுங்க.. இல்லைன்னா கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க மாட்டேன்.. லாலுவை மிரட்டும் மகன்

அவர் மீது நடவடிக்கை எடுங்க.. இல்லைன்னா கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க மாட்டேன்.. லாலுவை மிரட்டும் மகன்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் பீகார் பிரிவு தலைவர் மீது நடவடிக்கை எடுங்க இல்லைன்னா கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க மாட்டேன் என்று லாலு பிரசாத் யாதவை அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ் மிரட்டியுள்ளார்.

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் உட்கட்சி மோதல் தொடங்கியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் பிரிவு தலைவராக இருப்பவர் ஜெகதானந்த் சிங். இவர் தேஜஸ்வி யாதவுடன் ஆலோசனை செய்து விட்டு, கடந்த புதன்கிழமையன்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஆகாஷ் யாதவை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு ககன் குமார் என்பவரை தலைவராக நியமனம் செய்துள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுங்க.. இல்லைன்னா கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க மாட்டேன்.. லாலுவை மிரட்டும் மகன்
ஜெகதானந்த் சிங்

கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர். தன்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவுடன் தேஜ் பிரதாப்பிடம் சென்று முறையிட்டுள்ளார். இதனையடுத்து ஜெகதானந்த் சிங் மீது தேஜ் பிரதாப் யாதவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. தேஜ் பிரதாப் யாதவ் இது தொடர்பாக கூறியதாவது: அவர் (ஜெகதானந்த் சிங்) இது அவரது கட்சி என்று நினைக்கிறார். கட்சி அரசியலமைப்பு பின்பற்றப்படவில்லை. ஏன் எங்கள் மாணவர் தலைவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை?

அவர் மீது நடவடிக்கை எடுங்க.. இல்லைன்னா கட்சியின் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க மாட்டேன்.. லாலுவை மிரட்டும் மகன்
தேஜ் பிரதாப் யாதவ்

அவர்கள் எங்கள் கிருஷ்ணா-அர்ஜூன் ஜோடியை உடைக்க விரும்புகிறார்கள். அவருக்கு (ஜெகதானந்த் சிங்) எதிராக நடவடிக்கை எடுக்கும்படி என் தந்தை லாலு பிரசாத் யாதவை நான் வலியுறுத்துகிறேன். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நான் எந்த கட்சி நடவடிக்கைகளிலும் பங்கேற்க மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.