32 ஆண்டுகள் பிறகு கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர்… லாலு பிரசாத்தின் எதிர்பாராத பாசமான பதில்

32 ஆண்டுகள் பிறகு கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர்… லாலு பிரசாத்தின் எதிர்பாராத பாசமான பதில்

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் நேற்று அந்த கட்சியிலிருந்து விலகினார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், லாலு பிரசாத்தின் பழமையான கூட்டாளிகளில் ஒருவருமான ரகுவன்ஷ் பிரசாத சிங் நேற்று அந்த கட்சியிலிருந்து திடீரென விலகினார். இந்த அந்த கட்சியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காக கட்சியை விட்டு வெளியேறுகிறார் என்பதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை.

32 ஆண்டுகள் பிறகு கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர்… லாலு பிரசாத்தின் எதிர்பாராத பாசமான பதில்
ரகுவன்ஷ் பிரசாத் சிங்

ரகுவன்ஷ் பிரசாத் சிங் சாதரண கோடு போட்ட காகிதத்தில் தனது ராஜினாமா தகவலை எழுதி லாலு பிரசாத் யாதவுக்கு அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், கார்பூரி தாகூரன் மரணத்துக்கு பிறகு நான் 32 ஆண்டுகளாக உங்களுடன் நின்றேன். ஆனால் அதற்கு மேல் இல்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள். கட்சியிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் ஆதரவும் கிடைத்தது என அவர் எழுதி இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

32 ஆண்டுகள் பிறகு கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர்… லாலு பிரசாத்தின் எதிர்பாராத பாசமான பதில்
ஆர்.ஜே.டி.

இதனையடுத்து லாலு பிரசாத் உணர்வுபூர்வமாக பதில் அளித்துள்ளார். என்னால் அதனை நம்ப முடியவில்லை. நீங்கள் எங்கும் செல்லவில்லை லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கபட்டு தற்போது சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் 1997ம் ஆண்டில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை தொடங்குவதற்கு முன் ஜனதா தளம் கட்சியில் இருந்தார். அப்போது இருந்தே ரகுவன்ஷ் பிரசாத் சிங் லாலு பிரசாத்துக்கு மிகவும் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தார்.