பீகாரின் முக்கிய அரசியல் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார்.. லாலு பிரசாத்தின் உருக்கமான பதிவு

பீகாரின் முக்கிய அரசியல் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார்.. லாலு பிரசாத்தின் உருக்கமான பதிவு

பீகாரின் முக்கிய அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் நேற்று காலாமானார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், லாலு பிரசாத்தின் பழமையான கூட்டாளிகளில் ஒருவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் கடந்த 10ம் தேதியன்று அந்த கட்சியிலிருந்து திடீரென விலகினார். இது அந்த கட்சியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ரகுவன்ஷ் பிரசாத் உடல நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பீகாரின் முக்கிய அரசியல் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார்.. லாலு பிரசாத்தின் உருக்கமான பதிவு
லாலு பிரசாத் யாதவ்

இந்த சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று 74 வயதான ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி டிவிட்டரில், ரகுவன்ஷ் பிரசாத் சிங் நம்முடன் இல்லை. அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது மறைவு பீகார் மற்றும் நாட்டின் அரசியல் துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என பதிவு செய்து இருந்தார்.

பீகாரின் முக்கிய அரசியல் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார்.. லாலு பிரசாத்தின் உருக்கமான பதிவு
பிரதமர் மோடி

ரகுவன்ஷின் நெருங்கிய கூட்டாளியான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் டிவிட்டரில், அன்புள்ள ரகுவன்ஷ் பாபு! நீங்கள் என்ன செய்தீர்கள்? நேற்றுக்கு முந்தையநாள் நான் உங்களிடம் சொன்னேன், நீங்கள் எங்கேயும் போகவில்லை. ஆனால் நீங்கள் இவ்வளவு தூரம் சென்றீர்கள். நான் பேச முடியாமல் உள்ளேன். நான் சோகமாக உள்ளேன். நான் உன்னை மிகவும் இழப்பேன் என பதிவு செய்து இருந்தார்.