எதிரிகளை தவிடு பொடியாக்கும் லலிதாம்பிகை!

 

எதிரிகளை தவிடு பொடியாக்கும் லலிதாம்பிகை!

அம்பிகைக்கு உகந்த நாளான இன்று தேவியின் வடிவமாக உள்ள பிரபஞ்சத்தின் விளையாட்டுத்தனமான தெய்வமாக போற்றப்படும் லலிதாம்பிகையை வெள்ளிக் கிழமை நவமி திதியில் எதிரிகளை தவிடு பொடியாக்க வேண்டுவோம்.

எதிரிகளை தவிடு பொடியாக்கும் லலிதாம்பிகை!


‘லலிதா’ என்றால் விளையாடுபவள். லலிதா மகா திரிபுரசுந்தரி. சிவப்பெருமானோடு பிரிக்கமுடியாத ஆதி பரம்பொருள். ஆதியும் அந்தமுமான சிவப்பெருமானும் சக்தியும் ஓன்றினைந்த சக்தி. இதற்குமேல் தெய்வமேயில்லை.
ஸ்ரீலலிதாம்பிகை அகில உலகங்களுக்கும் தாயானவள். அவளை தூய மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்களெல்லாம் தீரும். எவனொருவன் தொடர்ந்து ‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்கிறானோ அவனது பார்வையாலே எதிரிகள் பறந்தோடுவர். அவ்வளவு சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும்.

எதிரிகளை தவிடு பொடியாக்கும் லலிதாம்பிகை!

அசுரர்களை அழிக்க அக்னி குண்டத்தில் அவதரித்தாள் லலிதா தேவி. ‘அசுரர்’களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளை மனமுருகி வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க, தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள் தேவர்கள். அப்பொழுது ஞானமாகிய அக்னி குண்டத்திலிருந்து அவதரித்தாள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்பு வில், மலர்க் கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வருகிறது.

எதிரிகளை தவிடு பொடியாக்கும் லலிதாம்பிகை!


சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல், சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

எதிரிகளை தவிடு பொடியாக்கும் லலிதாம்பிகை!

லலிதா சகஸ்ரநாமமும் அறிவியலும்:-

நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் ‘மூலாதாரம்’ என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது.

சகஸ்ரநாமம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவையெல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது.

-வித்யா ராஜா