டிபிஎஸ் வங்கியாக மாறிய லெஷ்மி விலாஸ் வங்கி – அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

 

டிபிஎஸ் வங்கியாக மாறிய லெஷ்மி விலாஸ் வங்கி – அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

வாராக்கடன் நெருக்கடியால் சிக்கித் தவித்த லஷ்மி விலாஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி கையகப்படுத்தி நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் லெஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

டிபிஎஸ் வங்கியாக மாறிய லெஷ்மி விலாஸ் வங்கி – அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

லக்ஷ்மி விலாஸ் வங்கி தொடர்ந்து இயங்குவதற்கான நிதி மூலதனத்தை, தங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. ஆனால், அப்படி திரட்ட முடியாத நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கி மூலதனம் அளிக்க முன்வரைவை அளித்திருந்தது. டிபிஎஸ் வங்கியிடமிருந்து, லஷ்மி விலாஸ் வங்கி மூலதனம் திரட்டினால், அந்த வங்கியுடன் இணைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த முன்வரைவினை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து லெஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ளன.

டிபிஎஸ் வங்கியாக மாறிய லெஷ்மி விலாஸ் வங்கி – அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

இந்த அனுமதி மூலம் லக்ஷ்மி விலாஸ் வங்கி, டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பது உறுதியானது. இதற்கான டிபிஎஸ் வங்கி முதற்கட்டமாக லெஷ்‌மி விலாஸ் வங்கிக்கு ரூ.2,500 கோடியை அளிக்கும். இந்த நிலையில், இன்று முதல் (நவம்பர்27) லெஷ்மி விலாஸ் வங்கியின் அனைத்து கிளைகளும் டிபிஎஸ் வங்கி கிளைகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக லெஷ்மி விலாஸ் வங்கிக்கு நாடு முழுவதும் 563 கிளைகள், 900 த்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. இவற்றை டிபிஎஸ் வங்கி இணைத்துக் கொள்ளும். வங்கியின் சில்லரை கடன்களில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் டிபிஎஸ் வங்கி எடுத்துக் கொள்ளும். அந்த வகையில், லெஷ்மி விலாஸ் வங்கி கிளைகள் முழுமையாக டிபிஎஸ் வங்கியாக செயல்படும். லெஷ்மி விலாஸ் வங்கி ஊழியர்கள், டிபிஎஸ் வங்கியின் ஊழியர்களாக தொடர்வார்கள்.

டிபிஎஸ் வங்கியாக மாறிய லெஷ்மி விலாஸ் வங்கி – அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் வங்கி, திவால் நிலைக்குச் சென்று வெளிநாட்டு தனியார் வங்கியுடன் இணைப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் மகாராஷ்டிராவின் பி எம் சி வங்கி திவால் நிலைக்கு சென்று, மீண்டும் சுயமாக செயல்படத் தொடங்கியது. அதற்கு மகாராஷ்டிர அரசு உறுதுணையாக இருந்தது. யெஸ் வங்கியும் அப்படியான சுழலில் சிக்கி, ரிசர்வ் வங்கி கைக்கு .சென்றது. நிர்வாக சீர்திருத்தங்களுக்கு பின்னர் அந்த வங்கியே முதலீடுகளை திரட்டிக் கொண்டு சுயமாக செயல்படத் தொடங்கியது. அந்த வங்கிகள் சுயமாக முதலீடு திரட்டிக்கொள்ள சாத்தியமான நிலையில், லஷ்மி விலாஸ் வங்கி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டும், திரட்ட முடியவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் வெளிநாட்டு வங்கி கையகப்ப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக இந்த விவகாரத்தை கவனிப்பவர்கள் கூறுகின்றனர்.

டிபிஎஸ் வங்கியாக மாறிய லெஷ்மி விலாஸ் வங்கி – அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

இது தொடர்பாக குற்றம்சாட்டியுள்ள வங்கி சம்மேளனங்கள் , இதன் மூலம் ஒரு வெளிநாட்டு வங்கி நேரடியாக இந்திய வங்கிகளை கையகப்படுத்தி விட முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய வங்கித்துறை எதிர்காலம் இதனால் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர். இந்திய வங்கிகள் பெரும்பாலும், கிராமப்புற சேவைகள், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதை பிரதானமாக கொண்டுள்ளன. அந்த போக்கு வெளிநாட்டு வங்கிகளிடம் இருக்காது என குறிப்பிடுகின்றனர். ஏற்கெனவே சிறிய வங்கிகளை இணைத்து பெரிய வங்கியாக்குவது என்கிற பெயரில், எஸ்பிஐயுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. அதன்பின்னர் தேனா வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கிகளாக மாற்றப்பட்டன. அவை பொதுத்துறை வங்கிகள் என்பதால், தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக சேவைகளில் இதுவரை பாதிப்பு இல்லாத வகையில் தொடர்கிறது.

டிபிஎஸ் வங்கியாக மாறிய லெஷ்மி விலாஸ் வங்கி – அச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

தனியார் துறையில் லாபம் இல்லாமல் இயங்க சாத்தியமில்லாத நிலையில், லெஷ்மி விலாஸ் வங்கி சேவை கிராம புறங்களில் தொடர்ந்து கிடைக்குமா? என அதன் வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக லெஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் அதிக அளவில் உள்ளனர். இவர்களுக்கு வங்கிக் கடன்களை தொடர்ந்து அளிப்பார்களா என கேள்வி எழுப்புகின்றனர் தொழில்முனைவோர்கள். வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில், சில்லரை கடன்களை அளிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்கிற நிலையில், லெஷ்மி விலாஸ் வங்கியை கையகப்படுத்திய டிபிஎஸ் வங்கி மட்டும் விதிவிலக்காக இருக்குமா ? என தொழில்சங்கங்கள் எழுப்பும் கேள்விக்கு வரும் நாட்களில் பதில் கிடைத்துவிடும்.