திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

அலைமகளுக்கு தனிக்கோயில் அதுவும் அலைகள் புரளும் கடற்கரையிலேயே அஷ்ட ஐஸ்வரியங்களை அருளும் அஷ்ட லட்சுமிகளுக்கும் அஷ்டாங்க விமானத்துடன் திருக்கோயில் அமைய வேண்டும் என்ற மகாபெரியவாளின் விரும்பினார் காஞ்சி பெரியவர் , அத்திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியாரி டம் ஒப்படைத்தார். சென்னை- பெசன்ட் நகரில், ஓடைமாநகர் பகுதியில் வங்கக்கடற்கரையோரம், 1974–ல் திருப்பணிகள் துவங்கியது .
இறையருளாலும், காஞ்சி முனிவரின் ஆசியுடனும் விரைந்து நடந்த பணிகள் 1976 ஏப்ரலில் நிறைவடைந்தன .

திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

அஷ்டாங்க விமானத்துடன் அற்புதமாக எழும்பிய திருக்கோயில். மகாலட்சுமி- மகாவிஷ்ணு , அஷ்ட லட்சுமிகளையும் அகோபில மடம் 44-வது பட்டம் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிக ஸ்வாமிகள் முன்னின்று பிரதிஷ்டை செய்தார். 1976 – ல் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது .

திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

கோயிலின் தரைத் தளம்- சக்ரமாகவும், விமான அமைப்பு- மேரு வடிவிலும் அமைந்துள்ளது. தத்துவம் உணர்த்தும் 18 படிகள், வற்றாத வங்கக் கடலே- கோயிலின் புஷ்கரணி, திருமகள் நீங்காதிருக்கும் வில்வமே- ஸ்தல விருட்சம் என்று பல அற்புதங்களைக் கொண்டிருக்கிறது அஷ்ட லட்சுமி ஆலயம்.

திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

பிரதான மூர்த்தியான மகாலட்சுமி உடனுறை மகாவிஷ்ணு சந்நிதி முதல், அஷ்ட லட்சுமியரையும் பக்தர்கள் தரிசித்து வலம் வரும் அமைப்பு, ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது .
முதலில் நின்ற கோலத்தில் மாகவிஷ்ணுடன் மகாலட்சுமி பத்ம பீடத்தில் நின்ற கோல நாயகியாக அபய- வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள். திருமஞ்சனம் , பூஜைகள் நடைபெறும் நேரங்களில் அர்ச்சனையும் உண்டு. அங்கிருந்து, 18 தத்துவங்களை உணர்த்தும் படிகள் வழியே ஏறி முதல் தளத்தை அடைந்தால் நான்கு தேவியரை தரிசிக்கலாம். 1 . ஸ்ரீசந்தான லட்சுமி தெற்கு நோக்கியும்.

திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது
2 . ஸ்ரீவிஜய லட்சுமி மேற்கு நோக்கியும் 3.
ஸ்ரீவித்யா லட்சுமி வடக்கு நோக்கியும் 4 .
ஸ்ரீகஜலட்சுமி  கிழக்கு நோக்கியும் விற்றிருந்து அருள் பாலிக்கின்றனர் .

திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

2-ஆம் தளத்தை அடைந்தால் 5 . தனலட்சுமி தரிசனம் . அங்கிருந்து
இறங்கி தரைத் தளம் வந்தால் 6 .ஸ்ரீஆதிலட்சுமி 7. ஸ்ரீதைரிய லட்சுமி  8. ஸ்ரீதானிய லட்சுமியை தரிசனம் செய்யலாம் .

திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

அஷ்டாங்க விமானத்தின் சிற்பங்கள் ஒவ்வொன்று அற்புதமானவை பாற்கடலில் இருந்து தோன்றும் மகாலட்சுமி , திருமாலுக்கு மாலையிடும் திருமகள், வைகுண்ட தரிசனம், ஆதிசங்கரர், மத்வர் , நிகமாந்த தேசிகர் தரிசனம் . திருமகள் பொன்மாரி பொழியும் காட்சி எல்லாம் அழகோ அழகு .

விநாயகர், குருவாயூரப்பன்,
சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர்,
ஆஞ்சநேயர், தன்வந்திரி
கருடாழ்வார் சந்நிதிகளும் உள்ளன .
சங்க நிதி- பதும நிதி சந்நிதிகள் விசேஷமானவை. சங்கடங்கள் தீர சங்க நிதியும் சகல நலன்கள் பெற பதுமநிதியும் பிரார்த்தனைகள் பலன்பெறலாம் .

வடக்கு நோக்கி வரிசையாக அமைந்திருக்கும் பெருமாளின் பத்து அவதாரச் சிலைகளையும் ஒருசேர தரிசிக்க, நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை .திருமகள் லட்சுமிதேவி தாயாருக்கு தனிக்கோயில் அமைய வேண்டும் என்ற காஞ்சி மகா பெரியவாளின் விருப்பம் சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயிலாக எழுந்து நின்று அருள்பாலிக்கிறது

திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள், லட்சுமி சீனிவாசருக்குத் திருக்கல்யாண உற்சவம் பிரார்த்தனை நடத்தினால் விரைவில் திருமணம் நடைபெறும். அஷ்ட லட்சுமிகளும் இந்த ஆலயத்தில் இருப்பதால், குழந்தை பாக்கியம், செல்வ வளம், கல்வி மேன்மை, மன தைரியம், உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறலாம்.

உள்ளூர் பக்தர்கள் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என எப்போதும் அஷ்டலட்சுமி கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் . ஆனால் தற்போது ஊரங்கல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை . மனசீகமாக அஷ்ட லட்சுமிகளையும் நினைவில் நிறுத்தி வழிபட , ஐஸ்வரியங்கள் அனைத்தையும் தாயார் அருள்வது உறுதி .