darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



ஆர்.ஜே. பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த நயன்தாரா: அதிர்ச்சியில் கோலிவுட்!

ஆர்.ஜே .பாலாஜி
ஆர்.ஜே .பாலாஜி

ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் வெளியான  எல்.கே.ஜி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நக்கல் நய்யாண்டி  கேலி  கிண்டலுக்கு  பஞ்சம் இல்லாமல் இருந்த இந்த திரைப்படம் பாலாஜியை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது. 

balaji

தற்போது  எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி  அடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்துள்ள   திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த ஜசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. 

nayan

இந்நிலையில் இப்படத்தில் நடிகை நயன்தாரா  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல முன்னனி இயக்குநர்களுடன் நடிகர்களுடன் வலம்வரும் இந்த லேடி சூப்பர் ஆர்.ஜே. பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நயன்தாராவுடன்  ஆர்.ஜே. பாலாஜி  நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.