முதலில் கொரோனா, அப்பறம் கரும்பூஞ்சை பாதிப்பு! மனமுடைந்த பெண் தற்கொலை

 

முதலில் கொரோனா, அப்பறம் கரும்பூஞ்சை பாதிப்பு! மனமுடைந்த பெண் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கரும்பூஞ்சை நோய்க்கு உள்ளனதால் மனமுடைந்த இளம்பெண் ரயில்முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் கொரோனா, அப்பறம் கரும்பூஞ்சை பாதிப்பு! மனமுடைந்த பெண் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அலமேடு பகுதியை சேர்ந்தவர் யமுனா. இவருக்கு கடந்த மே மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகாததால், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கரும்பூஞ்சை நோய்க்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் வலது கண் பாதிப்பு ஏற்பட்டது.இதன் பின்னர் சிகிச்சை செய்ய முடியாததால் அவரது கணவர் பவுல் காந்தி வேலை செய்யும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு நேற்று இரவு வீடு திரும்பி உள்ளனர். கரும்பூஞ்சை நோய் பாதிப்பு காரணமாக மிகுந்த மனமுடைந்த நிலையில் இருந்த இளம்பெண் யமுனா தனது வீட்டின் அருகே செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற ஈரோடு ரயில்வே போலீஸார் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கொரோனா காரணமாக கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் மேற்கொண்டு சிகிச்சை செய்ய வசதி இல்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது என தெரியவந்து. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.