“ஒரு லட்சம் லஞ்சம் வேணும்”.. கையும் களவுமாக சிக்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

“ஒரு லட்சம் லஞ்சம் வேணும்”.. கையும் களவுமாக சிக்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செக்கானூரணிரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அனிதா. கடந்த 2017ம் ஆண்டு பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரும் நல்லதம்பி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நல்லதம்பி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

“ஒரு லட்சம் லஞ்சம் வேணும்”.. கையும் களவுமாக சிக்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

இந்த வழக்கில் நல்ல தம்பியின் மகன் மாரி மற்றும் பேரன் கமல் பாண்டி பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை நீக்குமாறு நல்லதம்பி இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அனிதா, ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் கேட்டதை செய்து கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு நல்லதம்பி, ரூ.80 ஆயிரம் கொடுக்கிறேன் என கூறியிருக்கிறார். அதன் படி அனிதாவிடம் முதற்கட்டமாக ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுக்க சென்ற நல்லதம்பி, பணத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார்.

“ஒரு லட்சம் லஞ்சம் வேணும்”.. கையும் களவுமாக சிக்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

இங்கு தான் அனிதா வசமாக சிக்கியிருக்கிறார். அனிதாவிடம் பணத்தை கொடுப்பதற்கு முன்னரே லஞ்ச ஒழிப்பு போலீசாரின் உதவியை நாடிய நல்ல தம்பி, அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொண்டு சென்றுள்ளார். பணத்தை கொடுக்கும் போது அங்கே ஒளிந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், அனிதாவை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.