வென்டிலேட்டர் கிடைக்கவில்லை… நீதிபதிக்கே இந்த நிலைமையா?

 

வென்டிலேட்டர் கிடைக்கவில்லை… நீதிபதிக்கே இந்த நிலைமையா?

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சடலங்களை எரிக்க இடமில்லாமல், மயானங்களில் சடலங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் கிடைக்கவில்லை… நீதிபதிக்கே இந்த நிலைமையா?

ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதே நிலை தொடர்ந்தால், டெல்லி முற்றிலுமாக அழிந்து விடுமென அம்மாநில அரசு அச்சம் தெரிவித்துள்ளது. டெல்லியை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் டெல்லி சுகாதாரத்துறை ஆக்சிஜன் தட்டுப்பாடு, வென்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

வென்டிலேட்டர் கிடைக்கவில்லை… நீதிபதிக்கே இந்த நிலைமையா?

இந்த நிலையில், டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில் மெட்ரோபாலிட்டன் நீதிபதியாக பணியாற்றி வரும் நுபுர் குப்தா(32) என்பவர் வென்டிலேட்டர் கிடைக்கவில்லையென புகார் எழுந்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதிக்கே வென்டிலேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பது டெல்லி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.